வங்கிகளுக்கு இடையிலான ஏடிஎம் (ATM) பணமெடுப்புக்கான 1 ரிங்கிட் கட்டண விலக்கு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டண விலக்கு, வங்கிகளுக்குச் சொந்தமான மற்றும் அவற்றால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தனிப்பட்ட வணிக ஒப்பந்தங்களின் கீழ் சுயாதீன நிறுவனங்களால் இயக்கப்படும் ஏடிஎம்களுக்குப் பொருந்தாது என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பஹ்மி ஃபட்ஸில் இன்று பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பஹ்மி, இந்தக் கட்டண விலக்கின் வரம்பு குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து இந்த விளக்கம் அவசியமானதாக இருந்ததாகக் கூறினார்.
“நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் 84 சதவீதம் அல்லது ஏறக்குறைய 16,000 ஏடிஎம்கள் வங்கிகளுக்குச் சொந்தமானவை; இந்தக் கட்டண விலக்கு அவற்றுக்கே பொருந்தும்.
“மீதமுள்ள 16 சதவீத ஏடிஎம்கள், தனிப்பட்ட வணிக ஒப்பந்தங்களின் கீழ் வங்கிகள் அல்லாத சுயாதீன நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. எனவே, அவை 1 ரிங்கிட் கட்டண விலக்கு வரம்பிற்குள் வராது,” என்று அவர் கூறினார்.
சுயாதீன நிறுவனங்களால் இயக்கப்படும் ஏடிஎம்களில் பொதுவாக வங்கியின் சின்னம் (லோகோ) இருக்காது என்பதால், நுகர்வோர் இவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை எளிதாக அடையாளம் காண முடியும் என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.
“தற்போது, வங்கிகளுக்குச் சொந்தமான அனைத்து ஏடிஎம்களிலும் 1 ரிங்கிட் கட்டணம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு ள்ளது.




