Vimarsagan Media

Home » Malaysia » நிலப் பயன்பாடு தொடர்பான சிக்கல்களால் கே.கே. அனைத்துலக விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு

நிலப் பயன்பாடு தொடர்பான சிக்கல்களால் கே.கே. அனைத்துலக விமான நிலையத் திட்டம் நிறுத்திவைப்பு

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் (KKIA) 442.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விரிவாக்கத் திட்டம், நிலப் பயன்பாடு தொடர்பான சிக்கல்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லா தெரிவித்தார்.

விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையைச் சுற்றியுள்ள நிலப் பயன்பாட்டுச் சிக்கல்களே இத்திட்டம் முடங்கக் காரணம் என்று போக்கு வரத்துத் துறை துணை அமைச்சர் கூறினார்.

“தற்போதைய நிலையில், நிலப் பயன்பாடு தொடர்பான பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன; குறிப்பாக, விமான நிலையத்தின் ஓடுபாதையைச் சுற்றியுள்ள சில இடங்கள் மற்றும் பிற பகுதிகள் குறித்த முடிவுகள் சபா மாநில அரசால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

“இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது; இருப்பினும், நிலப் பயன்பாடு தொடர்பான அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னரே மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்க முடியும்,” என்று புதன்கிழமை (ஜூலை 😎 நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் ஹஸ்பி கூறினார்.

இச்சிக்கலைத் தீர்ப்பதற்காகச் சபா மாநில அரசுடன் தீவிர பேச்சுவார்த்தை கள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2024 நவம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த KKIA விமான நிலைய மேம்பாட்டுத் திட்டம், 2028-ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டு ள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப் படும்போது, ​​KKIA முனையம் 1-இன் (Terminal 1) பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 12 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இத்திட்டத்தில், தற்போதைய முனையக் கட்டிடத்தை மேம்படுத்துதல், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட ‘பியர்’ (pier) நீட்டிப்புப் பணிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புப் பணிகள் ஆகியவை அடங்கும்.

KKIA-வின் விரிவாக்கத் திட்டம் மற்றும் தாவாவ் (Tawau) விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த டத்தோ ஷாஹெல்மி யஹ்யா (BN-புட்டாடன்) எழுப்பிய கூடுதல் கேள்விக்கு ஹஸ்பி பதிலளித்தார்

Scroll to Top