Vimarsagan Media

Home » Malaysia » அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயதை 60-ஆகவே தொடர்ந்து வைத்திருக்க அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயதை 60-ஆகவே தொடர்ந்து வைத்திருக்க அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு வயதை 60-ஆகவே தொடர்ந்து வைத்தி ருக்க அரசு முடிவு செய்துள்ளதாக, அரசின் செய்தித் தொடர்பாளரான டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.

தற்போதைய ஓய்வூதியக் கொள்கையை மாற்றியமைப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைகளைத் தொடர்ந்து, ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி கூறினார்.

“தற்போதைய நிலையில் ஓய்வு வயதை உயர்த்துவதற்கான அவசியம் ஏது மில்லை என்று அரசு முடிவு செய்து உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக் கான ஓய்வு வயது 60-ஆகவே நீடிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம், பொதுத்துறை ஊழியர்களுக்கான தற்போதைய ஓய்வூதிய நடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது; தற்போதைய கட்டாய ஓய்வு வயதிற்கு அப்பால் வயது வரம்பை நீட்டிக்கும் எந்த நடவடிக்கையும் இப்போதைக்கு மேற்கொள்ளப்படாது.

Scroll to Top