Vimarsagan Media

Home » Malaysia » 2026-ஆம் கல்வியாண்டிற்கான RM150 உதவித்தொகையை) மொத்தம் 96,013 ஆறாம் ‘படிவ மாணவர்கள் பெறுவர்.

2026-ஆம் கல்வியாண்டிற்கான RM150 உதவித்தொகையை) மொத்தம் 96,013 ஆறாம் ‘படிவ மாணவர்கள் பெறுவர்.

2026-ஆம் கல்வியாண்டிற்கான RM150 மதிப்பிலான ‘ஆரம்பக்கட்டப் பள்ளி உதவித்தொகை’யை (BAP) மொத்தம் 96,013ஆறாம் ‘படிவம (Form Six) மாணவர்கள் பெறுகின்றனர்.

ஜூன் 28 முதல் ஜூலை 27 வரை நடைபெறும் இந்த விநியோக நடவடிக்கையில், நாடு முழுவதும் உள்ள 616 பள்ளிகளைச் சேர்ந்த 52,810 புதிய மாணவர்களும் அடங்குவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு RM14,401,950 ஆகும் என்றும் அது மேலும் குறிப்பிட்டது.

“2025-ஆம் ஆண்டில் ‘ஆறாம் படிவ மாணவர்களுக்கும் BAP திட்டத்தை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்கிணங்க, ஜூன் 8-அன்று பதிவு செய்த புதிய ‘ஃபார்ம் சிக்ஸ்’ மாணவர் களுக்கு இந்த உதவித்தொகையை விநியோகிக்கும் பணிகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது,” என்று வியாழக்கிழமை (ஜூலை 9) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு முதல் ‘ஐந்தாம் படிவ (Form Five) வரையிலான மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைப்ப தற்காக, 2012-ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் இந்த BAP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Scroll to Top