Vimarsagan Media

Home » Malaysia » நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்:- , பதற்றம் நிறைந்த 26 பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்:- , பதற்றம் நிறைந்த 26 பகுதிகளை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது

ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பதற்றம் நிறைந்த 26 ‘ஹாட்ஸ்பாட்’ (hotspots) பகுதிகளையும், பாதுகாப்பு நிலைமை மோசமடைய வாய்ப்புள்ள 15 ‘ஃபிளாஷ் பாயிண்ட்’ (flashpoints) பகுதிகளையும் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக துணை ஆணையர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.

11 ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளுடன் சிரம்பான் மாவட்டம் இந்தப் பட்டியலில் முதலிட த்தில் உள்ளதாக மாநிலக் காவல் துறைத் தலைவர் கூறினார்.ஜெம்போல் மற்றும் தம்பின் (தலா ஐந்து பகுதிகள்), நிலாய் (மூன்று) மற்றும் ரெம்பாவ் (இரண்டு) ஆகியவை அடையாளம் காணப்பட்ட பிற பகுதிகளாகும்.

“சிறப்புப் பிரிவின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் கடந்தகாலத் தேர்தல்களின் அடிப்படை யில் இந்தப் பகுதிகள் தீர்மானிக்கப் பட்டன.

“இருப்பினும், வேட்பாளர்கள் யார் மற்றும் அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து இந்தப் பகுதிகள் மாறக்கூடும்,” என்று வியாழக்கிழமை (ஜூலை 9) மாநிலக் காவல் தலைமையகத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறினார்.

சாத்தியமான அமைதியின்மையைத் தடுக்க, அதிக ஆபத்துள்ள மண்டல ங்களுக்குக் கூடுதல் காவலர்கள் முன்னதாகவே பணியில் அமர்த்தப் படுவார்கள்.

“பாதுகாப்புப் படைகள் எந்தவொரு இடையூறையும் உடனடியாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதே இந்த முன்கூட்டியே நிலைநிறுத்தும் உத்தியின் நோக்கமாகும்,” என்று கூறிய அவர், மக்கள் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் (3R) தொடர்பான விவகாரங் களைக் கிளறக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

Scroll to Top