Vimarsagan Media

Home » Malaysia » ‘கேடிஎம்பி’ நிறுவனம் ஜூலை 10 முதல் 12 வரை தெற்கு நோக்கிய தனது மின்சார ரயில் சேவைகள் இரட்டிப்பு

‘கேடிஎம்பி’ நிறுவனம் ஜூலை 10 முதல் 12 வரை தெற்கு நோக்கிய தனது மின்சார ரயில் சேவைகள் இரட்டிப்பு

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 240 வாக்காளர்களை அழைத்துச்செல்லும் வகையில் அரசு சாரா அமைப்பு ஒன்று இலவசமாக ஆறு பேருந்துகளை இயக்கவிருக்கிறது.

ஜொகூர் ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.இந்நிலையில், நான்கு பேருந்துகள் கோலாலம்பூரிலி ருந்தும், மற்ற இரண்டு பேருந்துகள் சிங்கப்பூர் வாக்காளர்களுக்காக சுல்தான் இஸ்கந்தர் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் (சிஐகியூ) வளாகத்திலிருந்தும் புறப்படும் என்று ‘ஸ்டேசன் பெமண்டாவன் ராக்யாட்’ அமைப்பின் பேராளர் யோங் சுய் வென் கூறினார்.

அப்பேருந்துகள் தங்காங், மூவார், பத்து பகாட், பெக்கான் நானாஸ், செகாமட், லாபிஸ், குளுவாங், ஆயர் ஈத்தாம், கூலாய் உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும். கோலாலம்பூரிலிருந்து ஜொகூருக்கான பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குப் புறப்படும். அதே நேரத்தில் ‘சிஐகியூ’ வளாகத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும், சனிக்கிழமை காலை 9 மணிக்கும் புறப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் அமைப்பு 2018 ஆம் ஆண்டிலி ருந்தே இவ்வாறு இலவசப் பேருந்து களை இயக்கிவருவதாகவும், வெளிமாநிலங்களில் வாழும் ஜொகூர் வாக்காளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Scroll to Top