தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார். (வயது 57) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த செழியன் சிகிச்சை பலனின்றி மரணம்
ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான் செழியன்.பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தொடர்ந்து பாலாவின் பரதேசி, தாரை தப்பட்டை, சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று, ராஜு முரகளின் ஜோக்கர், பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டை சுழி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வாடகை வீடு தேடும் ஒரு கீழ்-நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாகச் சித்தரித்த ‘டூ லெட்’ திரைப்படம், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
. இப்படம் 23-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய மொழித் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. இவ்விருது ‘கோல்டன் பெங்கால் டைகர்’ (Golden Bengal Tiger) கோப்பை, ரூ. 7 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது




