Vimarsagan Media

Home » Malaysia » மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஒன் ஹஃபிஸ் காஸி இரண்டாவது முறையாக மாநில முதல்வரானார்

மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஒன் ஹஃபிஸ் காஸி இரண்டாவது முறையாக மாநில முதல்வரானார்

நடந்து முடிந்த மலேசியாவின் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஒன் ஹஃபிஸ் காஸி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரண்டாவது முறையாக அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.

மச்சாப் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி ஜோகூர் மன்னர் இஸ்மாயில் முன்னிலையில் பதவியே ற்றார். இரண்டாவது தவணைக்கான நியமனச் சான்றிதழை அதிகாரபூர்வமாக அவர் பெற்றுக்கொண்டார்.

16வது ஜொகூர் மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 56 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி 48 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த நியமனம் அமைந்துள்ளது.

முன்னதாக, ஜொகூர் முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமான சௌஜானா விலிருந்து ஓன் ஹஃபிஸ் பயணித்த அதிகாரபூர்வ வாகனம் பிற்பகல் மணி 3.35 அளவில் புறப்பட்டுச் சென்றது காணப்பட்டது.

ஜொகூர் முதலமைச்சர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அவர் புக்கிட் செரின் அரண்மனையைச் சென்ற டைந்தார்.

சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெற்ற பதவியேற்புக்குப் பின்னர், பிற்பகல் 4.50 மணியளவில் ஓன் ஹஃபிஸ் அரண்மனையை விட்டு புறப்பட்டார்.

பதவியேற்பு விழாவை ஒட்டி ஜோகூர் அரண்மனை நுழைவாயிலுக்கு அருகே பாதுகாப்புப் படையினர், அரசாங்க அதிகாரிகள், ஊடகத் துறையினர் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைவர் டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, ஒன் ஹஃபீஸ் காசி இருவரையும் சந்தித்தார்.

Scroll to Top