Vimarsagan Media

Home » Malaysia » ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுப்பு

ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுப்பு

சிரம்பான் அம்பாங்கன் (Ampangan) பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப் பட்டார்.

அந்தக் குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாலை 5:39 மணியளவில் காவல்துறைக்கு இதுகுறித்த தகவல் கிடைத்ததாக செரம்பான் மாவட்டக் காவல் தலைவர் ஏசிபி (ACP) முகமது யாதிம் உஸ்மான் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், செரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் (JBPM) இணைந்து சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாக அவர் கூறினார்.

“தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புத் திறக்கப்பட்டது; அங்கு ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனக் கருதப்படும் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை யினர் கண்டனர்.

“சம்பவ இடத்தில் போராட்டம் நடந்ததற்கான அறிகுறிகளோ, குற்றச் செயல்கள் நடந்ததற்கான தடயங்களோ அல்லது வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்ததற்கான அடையாளங்களோ காணப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் தனியாக வசித்து வந்ததாகவும், அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அப்பெண்ணின் இறப்பை உறுதிப்படுத்தினர்; இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் ரெம்பாவ் (Rembau) மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Scroll to Top