Vimarsagan Media

Home » Malaysia » முதியோர் இல்லங்களுக்கான சேவை வரி குறித்து அரசு மறு ஆய்வு:- பிரதமர்

முதியோர் இல்லங்களுக்கான சேவை வரி குறித்து அரசு மறு ஆய்வு:- பிரதமர்

முதியோர் இல்லங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் (சேவை வரி உட்பட) குறித்து அரசு தற்போது மறுஆய்வு செய்து வருவதாக நிதியமைச்சர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

செப்டம்பர் 2018 முதல் முதியோர் இல்லங்கள் சேவை வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும், சேவை வழங்குநரின் வரிக்குரிய சேவைகளின் மதிப்பு ஆண்டுக்கு RM500,000-ஐத் தாண்டினால் மட்டுமே இந்த வரி பொருந்தும் என்றும் அன்வார் கூறினார்.

இத்தகைய நலவாழ்வு இல்லங்களின் சேவைகள் வணிக ரீதியான தன்மை யைக் கொண்டிருப்பதால், இந்த வரம்பு அவற்றுக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அதிகரித்து வரும் செலவுகளின் சுமையைக் கருத்தில் கொண்டு, முதியோர் இல்லங்கள் மீதான சேவை வரி குறித்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய கவலைகளை அரசு அங்கீகரிப் பதாகப் பிரதமர் கூறினார்.

மலேசியா இப்போது முதியவர்கள் அதிகம் உள்ள நாடாகக் கருதப்படுவதால், இச்சேவைகள் மிகவும் அவசியமான வையாக மாறி வருவதையும் அரசு உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

“இதன் காரணமாக, சமூக நலத் துறையால் நிர்வகிக்கப்படும் முதியோர் பராமரிப்பு சேவைகள் மீதான வரி விதிப்பு முறைகளை மறுஆய்வு செய்ய, நிதியமைச்சகமும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து விரிவான ஆய்வை மேற் கொண்டு வருகின்றன.

“சேவை வரியை இன்னும் துல்லியமான மற்றும் இலக்கு சார்ந்த முறையில் அமல்படுத்தும் நோக்கில், அடிப்படை அல்லது உயர்தர (premium) பராமரிப்பு சேவைகளை வழங்கும் முதியோர் பராமரிப்பு மையங்களை வகைப்படுத்து வதும் இந்த ஆய்வின் வரம்பில் அடங்கும்,” என்று அவர் நாடாளு மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

முதியோர் இல்லங்கள் மீது 8% சேவை வரி விதிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், இத்தகைய சேவைகளை வரித் திட்டத்திலிருந்து விலக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்தும் கூ போய் டியோங் (PH-கோத்தா மலாக்கா) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து வந்தார்.

Scroll to Top