Vimarsagan Media

Home » Malaysia » போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தொடர் சோதனை:- 8 சந்தேக நபர்களில் சிறுவனும் ஒருவன்

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தொடர் சோதனை:- 8 சந்தேக நபர்களில் சிறுவனும் ஒருவன்

3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப் பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, ஓராண்டுக்கு முன்பே பள்ளிக் கல்வியைக் கைவிட்ட 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான். இச்சம்பவம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றின் மீது கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்து உள்ளது.

ஜொகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் கூறுகையில், அந்த 16 வயது சிறுவன் கடந்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருந்ததும், அவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை யில் போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார். அந்தச் சிறுவனின் தாத்தாவுக்குச் சொந்தமான காரில் போதைப்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அச்சிறுவனுக்கு எந்தளவுக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்துக் காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“தங்கள் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள், எங்கே நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் பெற்றோர்களுக்கு ஒரு நினைவூட்டலாக அமைய வேண்டும்.போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தொடர் சோதனைகளின்போது கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் அந்தச் சிறுவனும் ஒருவன் என்று ஆணையர் அப் ரஹமான் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையில் 16 முதல் 78 வயதுக்குட்பட்ட ஏழு உள்ளூர் ஆண்களும் ஒரு இந்தோனேசியரும் கைது செய்யப்பட்டனர். ஆணையர் அப் ரஹமான் கூறுகையில், நகர மையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் இருந்த வாகன நிறுத்துமிடத்தில் காவல்துறை முதலில் சோதனை நடத்தியதாகவும், அங்கு அந்தச் சிறுவனும் மற்ற மூன்று சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“காரில் நடத்தப்பட்ட சோதனையில், 3.04 மில்லியன் ரிங்கிட் சந்தை மதிப்பு டையதாகக் கருதப்படும் 60.78 கிலோ மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) கொண்ட 50 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

Scroll to Top