உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். ஜப்பானில் கடும் கோடை வெப்பத்தி லிருந்து தப்பிக்க மனிதர்களுக்கான பிரிட்ஜ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜப்பானில் உள்ள குளிர்பான வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை அடிப்படை யாக கொண்டு, ஒரு மனிதன் உட்காரும் அளவில் ஒரு பெட்டிபோல உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த பெட்டியின் உட்புற வெப்பநிலை எப்போதும் 15 செல்சியஸ் (59 டிகிரி) ஆக பராமரிக்கப்படும். தனிநபர் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்ததும், 5 செல்சியஸ் (41 டிகிரி) குளிர்ந்த காற்று நேரடியாக உங்கள் தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப்பகுதியில் வீசும். வெறும் 5 நிமிடங்களில் உடலில் உள்ள வெப்பம் தணிந்து, 10 நிமிடங்களுக்குள் உடலின் வெப்ப நிலையை இயல்பு நிலைக்கு இந்த மெஷின் கொண்டு வருகிறது.




