பிரிட்டன் அமைச்சரவையில் தமிழ் பெண் உமா குமரன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அன்டி பர்னாம், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார். இதில், இலங்கை தமிழ் வம்சாவளியான உமா குமரனுக்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு இணைஅமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன் என்று உமா குமரன் தெரிவித்தசர்வ
உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியுள்ளனர். லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில், கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப்படிப்பையும், பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் கற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா, இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
லண்டன் மேயர் சாதிக் கானின் மூத்த ஆலோசர், கெய்ர் ஸ்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநர், C40 நகரங்களின் காலநிலை தலைமைத்துவக் குழுவின் இராஜதந்திர மற்றும் அனைத்துலக உறவுகளுக்கான இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.




