Vimarsagan Media

Home » Malaysia » கோலாலம்பூர் வணிகக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 109 வெளிநாட்டினர் பிடிபட்டனர்

கோலாலம்பூர் வணிகக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 109 வெளிநாட்டினர் பிடிபட்டனர்

ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து மொத்தம் 109 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப் பட்டனர்.

அக்கட்டிடம் ஒரு பிரத்யேக பொழுது போக்கு மன்றமாக (entertainment club) செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிய வருகிறது.

வியாழக்கிழமை (ஜூலை 23) காலை சுமார் 11.45 மணிக்கு இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வெளிநாட்டினரின், குறிப்பாக சீன நாட்டினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த பொதுமக்க ளின் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மூன்று வார கால உளவுத்துறை தகவல்களைச் சேகரித்த பின்னரே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) தெரிவித்தார்.

58 அமலாக்க அதிகாரிகள் அடங்கிய குழுவினர், அக்கோபுரக் கட்டிடத்தின் டவர் 1-இன் 18-வது தளத்திலும், டவர் 3-இன் 24-வது தளத்திலும் உள்ள இரண்டு இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு ஏழு மலேசியர்கள் மற்றும் சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் இந்தியா வைச் சேர்ந்த 113 வெளிநாட்டினர் என மொத்தம் 120 நபர்கள்சோதிக்கப்பட்டனர்.

“இந்த நடவடிக்கையின் போது, ​​வெளிநாட்டினர் கட்டிடத்திற்குள் உள்ள பல அலகுகளில் (units) புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.

தொடக்கக்கட்ட விசாரணையில், பிடிபட்ட வெளிநாட்டினரில் பெரும்பாலோர் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளைப் (social visit passes) பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்திருந்தாலும், அனுமதிச் சீட்டு நிபந்தனைகளை மீறி அனுமதியின்றி வேலை செய்து வந்ததாகச் சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

Scroll to Top