தேசிய அளவிலான இந்தப் அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பான ‘மிஸ் ஆஸ்திரியா’, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் அன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டது.
“எங்கள் ‘மிஸ் ஆஸ்திரியா 2024’ வெற்றியாளரான லூசியா சிசிக்கின் மறைவுச் செய்தியை அறிந்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளோம்,” என்று அந்த அமைப்பு ஜெர்மன் மொழியில் பதிவிட்டிருந்தது (அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில்).
லூசியா சிசிக்கை நினைவுகூர்ந்த அந்த அமைப்பு, அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்துக்கொண்டது.
“லூசியா ஒரு அற்புதமான இளம் பெண்ணாக நினைவுகூரப்படுவார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் உள்ளன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு தனது பதிவை இவ்வாறு நிறைவு செய்தது: “அன்பு லூசியாவே, நீங்கள் எப்போதும் எங்கள் ‘மிஸ் ஆஸ்திரியா’ குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.”




