வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜூ ஏவுக்கு (Kim Ju Ae) இளைய உடன்பிறப்பு இருப்பதாகத் தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது உடன்பிறப்பின் பாலினம் தெரியவில்லை.
கிம் ஜூ ஏ, தமது தந்தையின் அடுத்த வாரிசாகப் பார்க்கப்படுகிறார்.
கிம் ஜோங் உன்னுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக உளவு அமைப்பு முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கை, அவர்கள் பிறந்த வரிசை உள்ளிட்ட விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டதில்லை.
வடகொரியா அதன் தலைவர்கள், ஆளும் குடும்பம் குறித்த தகவல்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதால் கிம் ஜோங் உன்னின் பிள்ளைகள் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட உறுதி செய்வது கடினம்.
கிம் ஜூ ஏ 2022ஆம் ஆண்டு முதன் முறையாகப் பொதுவில் அறிமுகப் படுத்தப்பட்டார்.பல முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் தந்தையுடன் பங்கேற்றுள்ளார்.
வடகொரிய அரசாங்க ஊடகங்கள் அவரை “அன்புக்குரிய குழந்தை”, “வழிகாட்டும் மாபெரும் நபர்” என்றும் குறிப்பிட்டுள்ளன.பொதுவாக நாட்டின் உயர் தலைவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் பயன்படுத்தப்படும் சொல் அது:-.ஏஎப்பி




