Vimarsagan Media

Home » World » திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு – விமானியில் பகீர் தகவல்.

திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு – விமானியில் பகீர் தகவல்.

லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறிய தாக சர்வதேச ஊடகம்வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கை யில்அது ஒரு நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால் அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது.

நவீன டிரோனாக இருக்க கூடும இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது.

திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.

Scroll to Top