Vimarsagan Media

Home » Malaysia » தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடு வதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற சீனப் பெண் போலீசாரால் கைது

தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடு வதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற சீனப் பெண் போலீசாரால் கைது

கடந்த ஜூன் மாதம் செராஸ் (Cheras) பகுதியில், தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற விவகாரத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அனுப்பிய மிரட்டல் செய்திகள் குறித்த தகவலைப் புகார்தாரர் தனது ஊழியர் ஒருவரிடமிருந்து பெற்ற பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது சீனாவில் இருந்த புகார்தாரருக்கு, குறிப்பிட்ட நபர் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் கோரப் பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

“புகார்தாரர் சந்தேக நபருக்கு எந்தப் பணத்தையும் வழங்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது; இருப்பி னும், மேல் நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.”புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபரைக் கண்டறிந்து கைது செய்தனர்,” என்று அந்தத் தகவல் தெரிவித்தது.

இவ்வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Scroll to Top