Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தேசிய இதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தேசிய இதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 7 இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தேசிய இதயக் கழகத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு தொடர்பான வட்டாரங்களின்படி, நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கைகள் இன்று IJN-லேயே மேற்கொள்ளப் படலாம்.இது மருத்துவரின் ஆலோசனையைப் பொறுத்தது,” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் IJN-இல் அனுமதிக்கப்பட்டிருப்பதை இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

“எனக்குத் தெரிந்தவரை, குற்றச்சாட்டுப் பதிவு அல்லது அது தொடர்பான நடைமுறைகள் IJN-லேயே நடைபெற அதிக வாய்ப்புள்ளது. நேரம் குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. தற்போதைய நிலையில், IJN-இல் இந்த நடைமுறையை மேற்கொள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர் (DPP) விண்ணப்பிக்க வேண்டும்; ஆனால், இறுதி முடிவை நீதிபதியே எடுப்பார்,” என்று அந்த வட்டாரம் கூறியது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை முதலே, கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் மற்றும் IJN ஆகிய இரு இடங்களிலும் செய்தியாளர்களும் ஊடகவிய் லாளர்களும் கூடத் தொடங்கியுள்ளனர்

Scroll to Top