சீனாவின் பெருவாரியான மக்கள் விரும்பி உண்ணும் பழமாக டுரியான் விளங்குகிறது.ஆரம்பத்தில் குளிரூட்டப்பட்ட டுரியான் பழங்களை மலேசியாவிலிருந்து சீனா 2019ல் இறக்குமதி செய்தது.
பிறகு 2024ஆம் ஆண்டு முதல் அப்பழங்களை அதன் முழுவடிவில் நேரடியாக வாங்கத் தொடங்கியதோடு ‘டுரியான் அரசதந்திரம்’ என்ற கொள்கையின்படி, சீனா தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஆதரவு நல்கியது.
அதுமுதல் தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளும் சீனாவுக்கு டுரியான் பழங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கின.
ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு அதன் தரவுகளின்படி, சீனா உலக அளவில் 2020 முதல் 2022 வரையில் உற்பத்தியான டுரியான் பழங்களில் 95 விழுக்காட்டை இறக்குமதி செய்தது என்று தெரிவித்தது.
மேலும் சீனா 2025ல் 1.87 மில்லியன் டன் அளவு டுரியான் பழங்களை இறக்குமதி செய்துள்ளதையும் ஐநா அமைப்பு குறிப்பட்டது. அதன் மதிப்பு S$9.6 பில்லியன் (US$7.5 பில்லியன்) ஆகும்.




