பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், இதனால் பெரிய தோஷங்கள் எதுவும் இல்லை என கூறப்படுள்ளது.
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று நமது முன்னோர் களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் ஆடி அமாவாசை. வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளில் இந்த ஆண்டு சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது. சூரிய கிரகணம் அன்று ஆடி அமாவாசை
இந்து சமய ஆன்மீக வழிபாட்டில் சூரிய கிரகணம், அமாவாசை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கித்துவம் வாய்ந்த சக்தி வாய்ந்த நாட்களாகும். அதிலும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும் அம்பிகை வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப் படுவது வழக்கம்.
இந்த சமயத்தில் மந்திர ஜபம் தவிர மற்ற பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது என்பார்கள். இதனால் சூரிய கிரகணம் மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் இணைந்து வரும் நாளில் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா, கூடாதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு வருடத்தில் வரும் அமாவாசைகளில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை
அதனால் ஆடி அமாவாசை, பித்ருதோஷம் உள்ளிட்ட மிக கடுமையான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
சூரிய கிரகணம் இரவு நேரத்திலேயே வருகிறது. இதனால் கோவில் நடை அடைப்பு போன்றவை இந்த நாளில் இருக்காது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் வரும்.
இருந்தாலும் இரவு நேரத்தில் ஏற்படும் சூரிய கிரகணத்தால் தோஷம் ஏதும் ஏற்படாது. இதனால் வழக்கமான முறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடலாம. கிரகண நாளில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.




