நியாகா@கோலாலம்பூர்’ திட்டத்தின் கீழ் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமை யான வெற்றியைப் பெறவில்லை.
ஆண்டு இறுதிக்குள் 11,000 வணிகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப் பட்டாலும், கள நிலவரம் வேறுவிதமாக உள்ளது; திடீர் இடிப்பு நடவடிக்கைகள், நிர்வாகக் குழப்பம் மற்றும் விற்பனை சரிவு ஆகியவற்றை வணிகர்கள் எதிர்கொள்கின்றனர். மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட சில வணிகர்கள் தற்காலிக இடங்களில் பிழைப்பு நடத்தப் போராடி வருகின்றனர்.
செப்டம்பர் 2023-இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், கூட்டரசுப் பிரதேசங்கள் முழுவதும் உள்ள கடைகளை மேம்படுத்தி அழகுபடுத்தவும், வணிகர்கள் செயல் படுவதற்கு ஏற்ற வசதியான இடங்களை வழங்கவும் நோக்கம் கொண்டிருந்த்து .
இம்மேம்பாட்டுப் பணிகளில், கடைகளைத் தனித்தனி அலகுகளாக (modular kiosks) அல்லது பூட்டக்கூடிய கடைகளாக மாற்றுவதும், விளக்கு வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும்.
கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL)-இன் 200 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ், தலைநகர் முழுவதும் உள்ள 287 சிறு வணிக இடங்கள் பெரும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட விருந்தன.
, பொதுமக்களிடமிருந்து வந்த புகார் களைக் காரணம் காட்டி, ஜூன் 4 அன்று அமலாக்க அதிகாரிகள் வணிகர்களை அணுகியதாக கைருல் நிசான் கூறினார். ஜாலான் புடு உலு வியாபாரிகள் பின்னர் மற்றொரு சிக்கலை எதிர்கொண்டனர். அவர்களின் தற்காலிக இடத்திற்கு எதிரே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகக் கழகம் (MC), பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான கவலைகள் காரணமாக அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டது.
அதன்பிறகு, வியாபாரிகள் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சாலையின் மறுபுறம் தங்கள் கடைகளை மாற்றிக் கொண்டதாக கைருல் நிசான் கூறினார்.




