Vimarsagan Media

Home » Malaysia » பதவியை ராஜினாமா செய்த , வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்துள்ளார்

பதவியை ராஜினாமா செய்த , வோங் சென் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்துள்ளார்

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, வோங் சென் (Wong Chen) பிகேஆர் கட்சியிலிருந்து விலகி ‘பெர்சாமா’ கட்சியில் இணைந்துள்ளார்.

பூச்சோங், தாமான் புத்ரா பெர்தானாவில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெர்சாமா தலைவர் ரஃபிசி ராம்லி இதனை அறிவித்தார்.

17 ஆண்டுகளாக பிகேஆர் கட்சியுடன் பயணித்த நிலையில், இந்த விலகல் முடிவு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் கூறிய வோங், நேற்று காலை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.

“இது ஒரு கடினமான முடிவு,” என்று மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மேலும் கூறினார்.

பெர்சாமா கட்சியின் முக்கிய செயல்திட்டங்களுக்கு ஏற்ப கொள்கை ஆவணங்களைத் தயாரிக்கும் பொறுப்பு வோங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இந்த ஆவணங்கள் சுதந்திர தினத்தன்று வெளியிடப்படவுள்ளன.

ரஃபிசி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் பெர்சாமா கட்சியை வழிநடத்துவதற்காகத் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தபோதே, தானும் இறுதியில் கட்சியிலிருந்து விலகப்போவதாக வோங் முன்னரே குறிப்பிட்டிருந்தார்.

மே மாதம் நடைபெற்ற பெர்சாமா கட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்காக, ‘MyKhas’ தொகுதி நிதி ஒதுக்கீட்டு இணையதளத்தைப் பயன்படுத்தும் அனுமதி ரத்து செய்யப்பட்ட மூன்று PKR நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். மற்ற இருவர் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் ஆகியோர் ஆவர்

Scroll to Top