Vimarsagan Media

Home » World » பிரிட்டனில் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர்கவுதம் ரங்கராஜன் நியமனம்

பிரிட்டனில் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர்கவுதம் ரங்கராஜன் நியமனம்

பிரிட்டன் பிரதமர் புதிதாக உருவாக்கி உள்ள கட்டமைப்பு மற்றும் செயல் முறைக்கான நிபுணர் ஆலோசகர் என்ற பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வியூக நிபுணரும் மற்றும் மீடியா நிர்வாகியும், தமிழருமான கவுதம் ரங்கராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ஆக ஆன்டி பர்ன்ஹம் சமீபத்தில் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அரசில் பலரை மாற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணர் ஆலோசகர் என்ற பதவியை அவர் உருவாக்கி உள்ளார்.இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ரங்கராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். பெருநிறுவன திட்டமிடல்,ஊடகம் மற்றும் பொதுசேவை , ஒளிபரப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பற்ற இவர், இந்த வாரம் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெருநிறுவன திட்டமிடல் மற்றும் நிர்வாக அமைப்பு மாற்றங்களில் கவுதம் ரங்கராஜன் அனுபவம் பெற்றவர். பிரிட்டன் அரசின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகளில் அவர் மாற்றம் செய்யும் பணியில் அவர் முக்கிய பங்காற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் ரங்கராஜன், பிபிசியில் பணியாற்றி உள்ளார்.மாறி வரும் சந்தை, பார்வையாளர்கள் மற்றும் தொழில் நுட்பத்தில் 20 ஆண்டு அனுபவம் அவருக்கு உள்ளது.

Scroll to Top