கடந்த ஜூலை மாதம் சுமார் 25 கிலோ போதைப்பொருட்களுடன் இந்தோனே சியாவில் கைது செய்யப்பட்ட விமானி ஒருவர், 2024-ஆம் ஆண்டு முதல் பலமுறை பல்வேறு நாடுகளுக்கு சட்டவிரோத போதைப்பொருட்களைக் கடத்தியதாக நம்பப்படுகிறது.
ஜகார்த்தாவில் மலேசியக் காவல் துறையினர் நடத்திய விசாரணை யின்போது சந்தேகநபர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குனர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.
தனது விமானப் பயண அட்டவணையின் அடிப்படையில், மலேசியாவிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் போதைப் பொருட்களைக் கடத்திச் சென்றதாக அந்தச் சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று உசேன் கூறினார்.
“2024-ஆம் ஆண்டு முதல் அவர் இதில் ஈடுபட்டு வந்துள்ளார்; தனது விமானப் பயண அட்டவணைக்கு ஏற்ப, நாட்டிலி ருந்து பல்வேறு இடங்களுக்குப் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதே அவரது பணியாக இருந்து ள்ளது.
“இது அவருக்கு முதல் முறையல்ல; அவர் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு நாடுகளு க்குப் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றுள்ளார்,” என்று ஆகஸ்ட் 16 அன்று ‘சினார் ஹரியான்’ (Sinar Harian) செய்தி அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய தேசியக் காவல் துறையின் அனுமதியுடன், முதலில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, NCID குழுவினர் ஜகார்த்தா வில் அந்த விமானியைச் சந்தித்து விசாரித்ததாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.




