மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (IIUM) அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டா பங்கேற்கவிருந்த பொது விரிவுரை ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
“ஆசியாவின் நாயகர்களும் வில்லன்களும்: தலைமைத்துவம் குறித்த ஓர் ஆய்வு” (Asia’s Heroes and Villains: A Study of Leadership) என்ற தலைப்பிலான இந்த விரிவுரை, செவ்வாய்க்கிழமை யன்று பல்கலைக்கழகத்தின் ‘சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிகத்திற்கான நிறுவனம்’ (Istac) வளாகத்தில் நடைபெறவிருந்தது.
“அப்துல் ரசாக் பாகிண்டா பங்கேற்கும் பொது விரிவுரை ரத்து செய்யப்பட்டு ள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். “இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மனதார மன்னிப்பு கோருகிறோம்; உங்கள் புரிதலுக்கு நன்றி,” என்று IIUM தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து ள்ளது.
மங்கோலியப் பிரஜை அல்தான்டுயா ஷாரிபூவின் (Altantuya Shaariibuu) மரணம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் சிவில் ரீதியாகப் பொறுப்பாளியாகக் (civilly liable) கண்டறியப்பட்ட ரசாக்கை விரிவுரைக்குத் தேர்ந்தெடுத்தது குறித்தும், அந்த நிகழ்வு குறித்தும் IIUM-இன் கல்விசார் ஊழியர் சங்கம் (ASA) கவலைகளை எழுப்பியதைத் தொடர்ந்தே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டில் அல்தான்டுயாவின் சட்டவிரோதக் கொலையில், அரசாங்கம் மற்றும் இரண்டு முன்னாள் காவலர் களுடன் இணைந்து ரசாக்கும் கூட்டுப் பொறுப்பாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.




