அக்டோபர் 2 முதல் 4 வரை சிப்பாங் அனைத்துலக சர்க்யூட்டில் (SIC) நடைபெறும் F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்திற்கான மடானி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜோஹரி தெரிவித்துள்ளார்.
விற்பனை தொடங்கிய பிறகு டிக்கெட்டு களுக்கு வலுவான தேவை இருப்பதாக SIC தெரிவித்ததாகவும், மேலும் டிக்கெட்டு களைக் கிடைக்கச் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் தௌஃபிக் கூறினார்.
“நாங்கள் அவ்வப்போது புதிய முன்னேற்றங்களை அறிவிப்போம்,” என்று இன்று பஹாங்கின் தெமர்லோ வில் நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், பிரதமர் அன்வார் இப்ராஹிம், MyKad வைத்திருப்பவர் களுக்கு பிரத்தியேகமாக மடானி டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக அறிவித்தார், இதன் விலை RM200 முதல் தொடங்குகிறது.
பந்தயத்திற்கு கிடைத்த வலுவான வரவேற்பின் விளைவாக, அதன் அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையதளமான bahraingp.com-க்கு அதிக வருகை இருந்ததாகவும், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்ததாகவும் SIC பின்னர் கூறியது.
MyKad வைத்திருப்பவர்கள் RM200 முதல் RM2,083 வரையிலான ஆறு இருக்கைப் பிரிவுகளில் சிறப்பு விலைகளைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர்



