Vimarsagan Media

Home » World » இந்தோனேஷியாவில், இந்து பண்டிகையை அவமதித்து வீடியோ வெளியிட்ட பயணிக்கு ஓராண்டு சிறை

இந்தோனேஷியாவில், இந்து பண்டிகையை அவமதித்து வீடியோ வெளியிட்ட பயணிக்கு ஓராண்டு சிறை

இந்தோனேஷியாவின் பாலி தீவில் இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நியேபி(Nyepe) என்ற திருவிழாவை கொண்டாடு கின்றனர். அந்த நாளில் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், பொழுது போக்குகளை தவிர்த்து விடுவார்கள். சத்தம் எழுப்பாமல் அமைதியாக பணியாற்றுவார்கள். இது சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 19 ம் தேதி நடக்கும்.

இந்தாண்டு சுற்றுலா வந்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூசியன் ஆன்ட்ரின் என்பவர் இந்த பண்டிகையை அவமதித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் பாலி தீவு வந்த போது, பண்டிகை குறித்து அவரிடம், ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து டென்பசார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாரம்பரியம் குறித்து தனக்கு தெரியாது. உணவு கிடைக்காததால் இப்படி செய்துவிட்டேன். தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த, நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில், அவர் ஏற்கனவே சிறையில் இருந்த ஐந்து மாதத்தை கழித்துக் கொள்ளவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Scroll to Top