மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நாவல் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எழுத்துத்துறையில் வளர்ந்து வரும் புதிய திறமைகளை, குறிப்பாக இளைஞர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் இயல் மன்றம் எடுத்துள்ள இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. வெற்றி பெற்ற படைப்பாளியின் நூல் வெளியிடப்பட்ட தருணம், புதிய எழுத்தாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இளைஞர்களின் எழுத்தாற்றல் தொடர்ந்து மிளிரவும், தமிழ் இலக்கிய வானில் புதிய படைப்புகள் மலரவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தலைமையேற்ற மாண்பு மிகு யுனேஸ்வரன் தமதுரையில் கூறினார்
நாவல் போட்டியில் முதல் பரிசை தாமரை இரண்டாம் பரிசை ஜீவிதா மூன்றாம் பரிசை சாந்தா ஆகியோர் வென்றனர்




