Vimarsagan Media

Home » Malaysia » மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு கிளாந்தான் கடற்கரைக்குத் திரும்பிய பச்சை ஆமைகள்

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு கிளாந்தான் கடற்கரைக்குத் திரும்பிய பச்சை ஆமைகள்

பாசிர் பூத்தே பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று பல ஆமைக்குஞ்சு கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு கடல் ஆமைகள் கிளாந்தான் கடற்கரைக்குத் திரும்பியுள்ளன.

இந்தத் தகவல் பொதுமக்களால் உள்ளூர் மீன்பிடிச் சமூகத்தினரிடம் தெரிவிக்கப் பட்டது; பின்னர், மேலதிக நடவடிக்கை கள் மற்றும் கண்காணிப்புக்காக கெலந்தான் மீன்வளத் துறைக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

கண்டறியப்பட்ட குஞ்சுகள் ‘பச்சை ஆமை’ (green turtle) வகையைச் சேர்ந்தவை என்று கிளாந்தான் மீன்வளத் துறை இயக்குனர் இஸ்மாயில் இப்ராகிம் தெரிவித்தார். “பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாங்கள் 156 ஆமைக்குஞ்சு களை மீண்டும் கடலில் விட்டோம்.

“நீண்ட காலமாக கிளாந்தான் கடல் பகுதிகளில் கடல் ஆமைகள் கரைக்கு வருவதாக எந்தப் பதிவும் இல்லை. இந்தக் குஞ்சுகளின் வருகை எங்கள் கடல்சார் சூழலியல் மண்டலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும்,” என்று கெலந்தான் மீன்வளத் துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பாசிர் பூத்தேவில் உள்ள பச்சக்கான் (Pachakan), செமெராக் (Semerak) மற்றும் டோக் பாலி (Tok Bali) கடற்கரைப் பகுதிகளில் ஆமைக்குஞ்சுகள் மற்றும் முட்டைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிகள் மீண்டும் ஆமைகள் முட்டையிடும் இடங்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மாநில விவசாயம், வேளாண்-உணவுத் தொழில் மற்றும் பண்டங்கள் குழுவின் தலைவர் டத்தோ துவான் முகமது சாரிபுடின் துவான் இஸ்மாயில் கூறினார்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில், புலாவ் ரெடாங் (Pulau Redang) பகுதியைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் உள்ள ஆமைகள் முன்பு பாசிர் புத்தேவின் பச்சக்கான் மற்றும் செமெராக் கடற்கரைகளுக்கு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top