Vimarsagan Media

Home » Malaysia » பெல்டா மற்றும் அதன் துணை நிறுவனம் மீது ஊழல் தடுப்புஆணையம் 7 விசாரணை ஆவணங்கள் தொடக்கம்

பெல்டா மற்றும் அதன் துணை நிறுவனம் மீது ஊழல் தடுப்புஆணையம் 7 விசாரணை ஆவணங்கள் தொடக்கம்

பெல்டா (Felda) மற்றும் அதன் துணை நிறுவனமான ஃபெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (FIC) ஆகியவற்றின் முதலீடுகள் தொடர்பான முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஏழு விசாரணை ஆவணங்களைத் தொடங்கியுள்ளது.

2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டு காலத்தில் ஃபெல்டா மற்றும் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் மேற்கொண்ட முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் சொத்து கையகப்படுத்துதல்கள் மீது இந்த விரிவான சிறப்பு விசாரணை கவனம் செலுத்தும் என்று MACC-யின் தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமன் கூறியதாக ‘ஹரியான் மெட்ரோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 24 அன்று ஆறு புதிய விசாரணை ஆவணங்கள் தொடங்கப்பட்டதாகவும், ஏற்கனவே உள்ள மற்றொரு விசாரணை ஆவணம் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த ஆறு புதிய விசாரணை ஆவணங்களும், சொத்துகளின் உண்மையான மதிப்பீட்டு விலையை விட அதிகமான விலையில் அவற்றை வாங்கியது மற்றும் முதலீடு செய்தது தொடர்பானவை ஆகும்; இது ஒட்டு மொத்த ஃபெல்டா நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது,” என்று இன்று இங்குள்ள MACC தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

Scroll to Top