Vimarsagan Media

Home » World » கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர்

கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர்

இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வெளியேற உத்தரவிட்ட கென்ய அதிபர இந்தியாவின் முக்கிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ், கென்யாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு ள்ளது.

நாட்டிற்குப் போதுமான பலன்களை உருவாக்கத் தவறிவிட்டதாக கென்யா அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. கண்ணாடி மற்றும் இரசாயனப் பொருட்களைத் தயாரிப்பதற்காக சோடா சாம்பலை உள்நாட்டில் பதப்படுத்து வதற்குப் பதிலாக, அந்நிறுவனம் அதை ஏற்றுமதி செய்து வருவதாகக் கூறி, தனது செயல்பாடுகளை முடித்துக் கொண்டு வெளியேறுமாறு அதிபர் வில்லியம் ரூட்டோ கேட்டுக்கொண்டு உள்ளார்.

கென்யர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு களையும் முதலீடுகளையும் கொண்டுவரும் நோக்கத்துடன், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்று நடத்த புதிய முதலீட்டாளர்களை அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் ரூட்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் முடிவை மதிப்பதாகவும், நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண உரிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள் வாயிலாக ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடர உறுதிபூண்டுள்ளதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.

Scroll to Top