சந்தேக நபர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு, சட்டங்கள் மற்றும் விதிமுறை களுக்கு முரணான நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு இந்துக்களைத் தூண்டும் நோக்கம் கொண்டதாகக் காவல்துறை கருதுகிறது என கங்கார் காவல் துறைத் தலைவர் யுஷாரிஃபுதீன் யுசோப்,
ஆலோசகராகப் பணியாற்றும் 55 வயதான அந்த ஆர்வலர் வியாழக் கிழமை காலை சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கங்கார்: ஆகஸ்ட் 22 அன்று இங்குள்ள ஒரு இந்து கோவில் இடிக்கப்பட்டது தொடர்பான நிகழ்வு குறித்து, மக்களைத் தூண்டும் வகையிலான சமூக ஊடகப் பதிவை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப் படும் 55 வயதான ஆர்வலர் ஒருவர் இரண்டு நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
கங்கார் காவல் துறைத் தலைவர் யுஷாரிஃபுதீன் யுசோப் கூறுகையில், ஆலோசகராகப் பணியாற்றும் அந்த நபர் நேற்று காலை 10 மணிக்குச் சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த ஆர்வலரின் டிக்டாக் கணக்கில் வெளியான பதிவுகள் குறித்து பெர்லிஸ் காவல்துறைக்கு 14 புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 20 அன்று அந்தக் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்வினையாகவே இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப் பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு இந்து சமூகத்தைத் தூண்டும் நோக்கம் அந்த ஆர்வலருக்கு இருந்ததாகச் சந்தேகிக்கப் படுகிறது.
தேசத்துரோகம் மற்றும் இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.




