Vimarsagan Media

Home » Malaysia » கமாண்டர் கேசாத்ரியா எண்டுரன்ஸ் சேலஞ்ச்’ 2026 போட்டி:- ஒருவர் மரணம் மற்ற எட்டு பேர் மருத்துவமனையில் !

கமாண்டர் கேசாத்ரியா எண்டுரன்ஸ் சேலஞ்ச்’ 2026 போட்டி:- ஒருவர் மரணம் மற்ற எட்டு பேர் மருத்துவமனையில் !

மாரான், ஜெங்காவில் உள்ள யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (UiTM) வளாகத்தில் நடைபெற்ற ‘கமாண்டர் கேசாத்ரியா எண்டுரன்ஸ் சேலஞ்ச்’ (KKEC) 2026 போட்டியில் பங்கேற்றபோது உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்ற எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் நேற்று மாலை 6.59 மணிக்குக் கிடைத்ததாக மாரான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பிரண்டு வோங் கிம் வாய் தெரிவித்தார்.

“உயிரிழந்தவர் 21 வயதுடைய ஆண் மாணவர் ஆவார். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கூடுதல் விவரங்கள் வழங்கப்படும்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக அவர்கள் அனைவரும் சுயநினைவை இழந்ததாகவும், கடும் வெப்பமான வானிலையே அவர்களின் உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

Scroll to Top