Vimarsagan Media

Home » Malaysia » அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூத்த மருத்துவ அதிகாரி ஐந்தாண்டு காவல் .

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மூத்த மருத்துவ அதிகாரி ஐந்தாண்டு காவல் .

சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முழங்கால் பொருத்துதல் களை (knee implants) வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, மலாக்காவில் உள்ள மூத்த மருத்துவ அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஐந்து நாட்கள் காவலில் வைத்துள்ளது.

50 வயதுடைய இந்த அரசு ஊழியருக்கான காவல் உத்தரவு, இன்று காலை ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் ஷார்தா ஷியன்ஹா சுலைமானால் பிறப்பிக்கப்பட்டதாக ‘ஹரியான் மெட்ரோ’ செய்தி வெளியிட்டுள்ளது.

MACC அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, சந்தேக நபர் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

வட்டாரத் தகவல் ஒன்றின்படி, வாக்கு மூலம் அளிப்பதற்காக மலாக்கா MACC அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் அந்தச் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்தேக நபர் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

Scroll to Top