அமெரிக்காவின் செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில், ‘கிளட்ச்’ செஸ் தொடர் நடக்கிறது. மூன்று நாள் இத்தொடரில், உலகின் முன்னணி வீரர்கள் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்காவின் பேபியானோ காருவானா, ஹிகாரு நகமுரா என நான்கு பேர் மட்டும் பங்கேற்கின்றனர்.
இன்று இரண்டாவது நாளில், மூன்று சுற்று (4, 5, 6) போட்டி நடந்தன. ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோதினர். முதலில் பிரக்ஞானந்தா-சிந்தரோவ் மோதினர். இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39 நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில் தோல்வியடைந்தார்.ஐந்தாவது சுற்று முதல் போட்டியில் பிரக்ஞானந்தா- நகமுரா மோதினர். இதன் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 38 நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்த போட்டியிலும் அசத்திய இவர், 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா, பேபியானோவை எதிர்கொண்டார். முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 77 வது நகர்த்தலில் பேபியானோவை வீழ்த்தினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அடுத்த போட்டி 34 நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.முதல் நாள் முடிவில் பிரக்ஞானந்தா, 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, இரண்டாவது நாளில் மொத்தம் 11 புள்ளியுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். அடுத்த 3 இடத்தில் சிந்தரோவ் (8.5), பேபியானோ (8.5), நகமுரா (8.0) உள்ளனர்.




