Vimarsagan Media

Home » Malaysia » கோழிகளை உயிருடன் சுடுநீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம்;- காவல்துறை அங்கு அதிரடி சோதனை

கோழிகளை உயிருடன் சுடுநீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம்;- காவல்துறை அங்கு அதிரடி சோதனை

புச்சோங்கில் உள்ள கோழி இறைச்சி பதப்படுத்தும் ஆலை ஒன்றில், கோழிகளை உயிருடன் சுடுநீரில் மூழ்கடித்துக் கொன்றதாகக் கருதப்படும் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்று அதிகாலை ‘ஆப் டாரிங் சில்லர்’ (Op Taring Chiller) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், 12 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தளபதி ஜாகி அஷார் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின்போது, ​​மொத்தம் 468 பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 6.5 டன்னுக்கும் அதிகமான கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 85,400 ரிங்கிட் ஆகும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இடத்தில், முறையான ‘ஹலால்’ (Halal) சான்றிதழ் இன்றி கோழிகளை அறுத்து, பதப்படுத்தி, விநியோகம் செய்து வந்ததாகச் சந்தேகிக்கப் படுகிறது என்று ஜாகி கூறினார்.

இந்த நடவடிக்கையானது சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (Jakim), சுற்றுச்சூழல் துறை மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த ஆலை நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்ததும், செப்பாங் பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கோழிப் பண்ணை களிலிருந்து கோழிகள் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Scroll to Top