Vimarsagan Media

Home » Malaysia » காதலி பிரிந்து சென்றதால், அவர் மீது அமிலம் வீசியதாகக் கூறப்படும் வெளிநாட்டவருக்கு வலைவீச்சு.

காதலி பிரிந்து சென்றதால், அவர் மீது அமிலம் வீசியதாகக் கூறப்படும் வெளிநாட்டவருக்கு வலைவீச்சு.

பெட்டாலிங் ஜெயா, பி.ஜே.எஸ் 4 (PJS 4) பகுதியில், தனது காதலி மீது அமிலம் வீசியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைப் போலிஸ் தேடி வருகின்றனர்.

‘பெரித்தா ஹாரியான்’ ஊடகத்தின் தகவல்படி, செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலிஸ் தலைவர், உதவி ஆணையர் ஷம்சுடின் மாமட் தெரிவித்தார்.

“இது குறித்து எங்களுக்குப் புகார் கிடைத்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் காதலர்களாக இருந்துள்ளனர். அவர்கள் பிரிந்ததே இந்தச் சம்பவத் திற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவரது பின்னணி குறித்த விவரங்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருவதாகவும் ஷம்சுடின் தெரிவித்தார்.

உணவகம் ஒன்றில் பணிபுரியும் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், அமிலம் என்று நம்பப்படும் திரவம் வீசப்பட்டதில் தீக்காயங்களுக்கு உள்ளானார்.

“அவர் தற்போது மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் தீக்காயங்க ளுக்கான சிகிச்சையைப் பெற்று வருகிறார்.”

“சந்தேக நபரைத் தேடும் பணியின் ஒரு பகுதியாக, சம்பவத்தைக் நேரில் பார்த்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் கூறினார்.

Scroll to Top