அதில் 28 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 14 நாள்கள் கொண்ட தீவிரத் தேர்தல் பிரசாரத்திற்கான களமும் ஆரம்பமாகிறது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 28 வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள்மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அங்குப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் தேர்தல் அதிகாரிகள் தகுதிபெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாக நவம்பர் 14ஆம் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேவேளையில், முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நாளாக நவம்பர் 10ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இத்தேர்தலில் மொத்தம் 687,697 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 675,166 சாதாரண வாக்காளர்களும் 9,769 ராணுவ அதிகாரிகளும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளும் 2,762 காவல்துறையினரும் அடங்குவர். படம் பெர்னாமா




