Vimarsagan Media

Home » Malaysia » மலாக்கா மாநிலத் தேர்தலில் 28 இடங்களுக்கு 79 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் 28 இடங்களுக்கு 79 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்

16-வது மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 79 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பக்கத்தான் ஹராப்பான் (PH) 24 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது; அதனைத் தொடர்ந்து பாரிசான் நேசனல் (BN) 23 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் (EC) தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் கூறுகையில், இன்று காலை 10 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை நிறைவடைந்த நிலையில், பெறப்பட்ட 79 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டன என்றும், எந்தவொரு வேட்பாள ரின் மனுவும் நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.6 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டிகளும் நடைபெறவுள்ளன,” என்று ரம்லான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் உள்ள 79 வேட்பாளர்களில், 65 பேர் ஆண்கள் மற்றும் 14 பேர் பெண்கள் ஆவ.ர்

வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் 40 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் (33 பேர்); இவர்களுக்கு அடுத்தபடியாக 50 முதல் 59 வயதுடையவர்கள் 22 பேரும், 30 முதல் 39 வயதுடையவர்கள் 14 பேரும் உள்ளனர்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வேட்பாளர்கள் எட்டு பேர் உள்ளனர்; 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இருவர் உள்ளனர்.

Scroll to Top