திரையுலகிலும் இசைத்துறையிலும் வாய்ப்புகளைத் தேடி தனது பயணத்தைத் தொடங்கிய இசையமைப்பாளர் பாலன்ராஜ், இன்று தனது அனுபவத்தாலும் திறமையாலும் பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் தனக்கான வாய்ப்பைத் தேடி அலைந்தவர், இன்று மற்றவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களத்தை உருவாக்கி வருவது பாராட்டுக்குரிய மாற்றமாகும்.
வெற்றியைத் தனக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், மற்றவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவது அவரது பயணத்தின் சிறப்பம்சமாகும்.
வாய்ப்புக் கிடைப்பது வெற்றி அல்ல…
மற்றவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதே உண்மையான வெற்றி!




