செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு மேலாண்மை அமர்வுக்குப் பிறகு, அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்ருல் தாருஸ் இதற்கான தேதிகளை நிர்ணயித்தார்.
தற்காப்பு வழக்கறிஞர் டத்தோ கீதன் ராம் வின்சென்ட் இதனை உறுதிப்படுத்தினார். மேலும், மலேசிய இந்திய காங்கிரஸின் (ம.இ.கா) துணைத் தலைவரான சரவணனின் தரப்பு, தங்களது தற்காப்பு வாதங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
[விசாரணைக்கான தேதிகளாக மார்ச் 4, ஏப்ரல் 12, மே 24 முதல் 27 வரை, ஆகஸ்ட் 17 முதல் 19 வரை மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 25 வரை ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சரவணனின் சட்டக் குழு, விசாரணையை விரைவில் தொடங்குமாறு பலமுறை வலியுறுத்தியிருந்தது.
முன்னாள் அமைச்சரான இவர் மீது, கடந்த ஆகஸ்ட் 28 அன்று குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டன. 2022-ஆம் ஆண்டில் ‘டி.ஒய்.கே.பி இன்ஜினியரிங்’ (TYKB Engineering Sdn Bhd) நிறுவனத்திற்கு 1,000 வெளிநாட்டு ஊழியர்களை அமர்த்த அனுமதி வழங்கியதற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து, நீதிமன்றத்தில் விசாரணை கோரியுள்ளார்.




