இதில், முன்னாள் உயர்நிலைப் பள்ளி முதல்வரான பியா தாண்டியா 51.9% ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அஸ்கார் 49.1சதவீத ஓட்டுகளை வாங்கியுள்ளார்.
பிளோரிடாவின் 22வது தொகுதி ஜனநாயகக் கட்சியினருக்கு மிகவும் சவாலான தொகுதிகளில் ஒன்றாகும். அதனை பியா தாண்டியா கைப்பற்றி கொடுத்துள்ளார். இவருக்கு ‘இந்தியன் அமெரிக்கன் இம்பேக்ட்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தன் பட்டேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த பியா தாண்டியா இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் பியா தாண்டியா. தன்னுடைய 28 வயதில் ஏழை மாணவர்களுக்காக பள்ளி ஒன்றை துவக்கினார். இதன்மூலம், மிக இளம் வயதில் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக திகழ்ந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.




