30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், இன்று காலை சுமார் 11:00 மணியளவில் பத்து பஹாட்டில் உள்ள MACC அலுவலகத் திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
தனது நண்பர் எந்தவித சட்ட நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர் அந்த காவல்துறை அதிகாரியிடம் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க முயன்றதாகக் கருதப்படுகிறது.
அவரது நண்பர், காலாவதியான கடப்பிதழை வைத்திருந்த குற்றத்திற்காக முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்தார். இது 1959/63-ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)-ன் கீழ் ஒரு குற்றமாகும்.
இந்தக் கைது நடவடிக்கையை ஜோகூர் மாநில MACC இயக்குநர் டத்தோ ஹஸ்ருல் ஷஸ்ரீன் அப்து யாசிட் உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு, 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 17(b)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




