Vimarsagan Media

Breaking News

இந்திய சமூகத்திற்கான அரசாங்க உதவி என்பது ‘மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு’ (Mitra) மூலம் வழங்கப்படும்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகச் சிங்கப்பூரின் ரீனா லீ (Rena Lee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த தனது நண்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்க்க, போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவருக்கு 1,500 ரிங்கிட் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் உள்ளூர் பெண் ஒருவரை, ஜோகூர் மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் புளோரிடா மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 22வது தொகுதியில், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பியா தாண்டியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் கடற்படை வீரர் கேசே அஸ்கார் களமிறங்கினார்.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், போர்ப்ஸ் இதழ் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது

Home » World » ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகச் சிங்கப்பூரின் ரீனா லீ (Rena Lee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகச் சிங்கப்பூரின் ரீனா லீ (Rena Lee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்த நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளில் ஒருவராக அவர் பணியாற்றுவார். அனைத்துலகச் சட்ட நிபுணரான ரீனா லீ சிங்கப்பூரின் சிறப்புத் தூதராகப் பணியாற்றியவர்.

அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர் அவர்.அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்கிழக்காசியப் பெண்ணும் அவர்.

57 வயது லீயின் ஒன்பதாண்டுப் பதவிக்காலம் அடுத்த வருடம் தொடங்கும்.ஐந்து இடங்களுக்குப் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களில் ரீனா லீயும் ஒருவர். ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் அவர் ஆக அதிகமாக 151 வாக்குகளைப் பெற்றார்.

அனைத்துலகச் சட்டத்துறையில் ரீனா லீயின் நிபுணத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் அது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

ரீனா லீ தெரிவுசெய்யப்பட்டிருப்பது, அனைத்துலகச் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகச் சட்ட அமைச்சர் எட்வின் தோங் கூறினார்.

Scroll to Top