Vimarsagan Media

Breaking News

சிரம்பானில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ் படம்’.

இன்று இரவு 10:00 மணி வரை எட்டு மாநிலங்கள் மற்றும் லாபுவானில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலமான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

Home » World » இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

உலகம் முழுவதும் சுனாமி பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5-ந்தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

சுனாமி என்பது கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அல்லது நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளால் உருவாகும் மிகப்பெரிய கடல் அலைத் தொடர் ஆகும். இந்த அலைகள் கடற்கரையை அடையும்போது மிகுந்த வேகத்துடனும் சக்தியுடனும் நிலப்பகுதிக்குள் புகுந்து பெரும் உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தக்கூடும்

Scroll to Top