Vimarsagan Media

Breaking News

சிரம்பானில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ் படம்’.

இன்று இரவு 10:00 மணி வரை எட்டு மாநிலங்கள் மற்றும் லாபுவானில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலமான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

Home » World » அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

தனது இந்த ஓய்வு முடிவை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

“போர்ச்சுக்கல் மக்களுக்கு. நமது தேசிய அணியின் 7-ஆம் எண் ஜெர்சியைக் கழற்றி வைக்கும் நேரம் வந்துவிட்டது. அது பிரத்தியேகமாக என்னுடையது என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் 23 ஆண்டுகளாக அதை அணியும் பாக்கியமும் பொறுப்பும் எனக்கு இருந்தது.” என வீடியோவில் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார்.

41 வயதான ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களை அடித்துள்ளார். ஐந்து முறை பலோன் டி ஓர் விருதை வென்றுள்ளார்.

ஆண்கள் அனைத்துலக கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றுள்ளார்.

சமீபத்தில் போர்ச்சுகல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக ரொனால்டோவுக்கு ஒருமாதம் தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top