நெகிரி செம்பிலான் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமதுவின் தகவலை மேற்கோள் காட்டி ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 28 முதல் 34-க்கு இடைப்பட்டதாகும்; இவர்கள் அனைவரும் 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் உறவினர்கள் ஆவர்.
டிக்டாக் தளத்தில் வைரலான காணொளி ஒன்றில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரைச் சிலர் துன்புறுத்துவது பதிவாகியிருந்தது. இது குறித்துக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
நேற்று அந்த முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி, சந்தேகத்திற்குரிய அந்த மூவரையும் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட முதியவரைத் தாக்குவ தற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சக்கர நாற்காலி மற்றும் ரப்பர் குழாய் (rubber hose) ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று அல்சாஃப்னி தெரிவித்தார்.




