சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம், தமிழ் சினிமாவில் நிலவும் வழக்கமான காட்சிகளையும், திரைப்படங்களையும் நகைச்சுவையாகக் கிண்டல் செய்து ரசிகர்களைக் கவர்ந்தது.
மூன்றாம் பாகத்துக்கு தயாரான படக்குழு
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘தமிழ் படம் 2’ உருவானது. இதில் சிவாவுடன் சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகமும் பல திரைப்படங்களையும், சினிமா பாணிகளையும் பகடி செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இதையடுத்து, இப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது ‘தமிழ் படம் 3’ உருவாகிறது. இதன் மூலம் சிவா மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார்.
முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகத்திலும் சமகாலத் திரைப்படங்களையும், சினிமா உலகின் போக்குகளையும் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘தமிழ் படம் 3’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




