Vimarsagan Media

Home » Malaysia » அம்னோவில் சேர விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்கிறோம்!!

அம்னோவில் சேர விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்கிறோம்!!

பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமாட. காலிட் நோர்டின், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய விண்ணப்பங்களைப் பெற தயாராக இருப்பதாக கூறினார்.

“அம்னோவில் சேர விரும்பும் எவரையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் ஒரு ஊடக பேட்டியில் கூறினார். 2018 இல் பெர்சத்துவில் சேருவதற்கு முன்பு, ஹம்சா அம்னோ உறுப்பினராக இருந்தார் மற்றும் மறைந்த துன் அப்துல்லா அமாட் படாவி மற்றும் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் ஆகிய இருவரின் பாரிசான் நேஷனல் (பிஎன்) அமைச்ச ரவையில் பணியாற்றினார்.

நேற்று, உச்ச கவுன்சில் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் மஸ்லான், டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெர்சத்துக்குள் ஏற்பட்டுள்ள உள் குழப்பத்தை அம்னோ பயன்படுத்திக் கொள்ளாது என்றார்.

பெர்சத்துவின் முன்னாள் தலைவர்கள் அம்னோவில் மீண்டும் வரவேற்கப் படலாம் என்ற ஊகங்கள் குறித்து கருத்து தெரிவித்த முகமாட், முறையான விண்ணப்பங்கள் செய்யப்பட்டால், எந்தவொரு முடிவும் கட்சியின் உச்ச கவுன்சிலிடம் மட்டுமே இருக்கும் என்றார்.

துணைத் தலைவராக இருந்த ஹம்சா உட்பட பதினேழு பெர்சத்து தலைவர்கள் கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Scroll to Top